
‘கன்னத்துக்கு எட்டியது உதட்டுக்கு எட்டாமல் போய்விட்டது...’ கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லைன்னுதானே சொல்வாங்க என கேட்பவர்கள், காண்க ‘கண்டேன் காதலை’ மேட்டர்.
இந்தியில் ஹிட்டடித்த ‘ஜப்வி மெட்’ படம்தான் தமிழில் ‘கண்டேன் காதலை’யாக ஜம்ப் ஆகிறது. காதல் தோல்வியில் தற்கொலை முடிவுக்கு வரும் ஒருவன், ஒரு பெண்ணின் சந்திப்பிக்குபின் தனது முடிவை மாற்றி அவளோடு டிராவல் பண்ணுவதுதான் படத்தின் கதை.
ஒரிஜினல் படத்தில் நாயகன் சாஹித் கபூரும், நாயகி கரீனா கபூரும் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தமிட்டுக் கொள்வது போன்ற காட்சி இடம் பெறுகிறது. தமன்னாவுக்கு அதுபோல தர பரத் தனது உதட்டையெல்லாம் தயார்செய்து வைத்திருந்த நிலையில் இயக்குனர் கண்ணன் காட்சியில் செய்த மாற்றம், பரத்தை ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.
அதாவது அந்த காட்சியை நாகரீகமாக படம் பிடிக்கவேண்டும் என்பதால் முத்தம் தரும் ஏரியாவை உதட்டிலிருந்து கன்னத்திற்கு மாற்றினாராம் இயக்குனர் கண்ணன். அப்புறமென்ன கன்னத்தில் முத்தமிடும் காட்சியில் கப்சிப்பென நடித்து கொடுத்தாராம் பரத்.
ஆடியன்ஸ்... நீங்களே சொல்லுங்க இது நியாயம்தானா?
0 comments:
Post a Comment