தமன்னா பேசிக் கேட்டிருக்கிறீர்களா...? அவர் படத்தில் பேசுவது எல்லாம் அவருடைய சொந்தக் குரலில் அல்ல... எல்லாமே டப்பிங் வாய்சில் தான்.
டிவி பேட்டிகளில் மேடம் தமிழில் சில சமயம் பேச ஆரம்பித்தார் என்றால் அவ்வளவுதான். பேசுற நாற்பது வார்த்தையில் முப்பத்தைந்து வார்த்தைகள் ஆங்கிலத்தில்தான் வரும். இப்படிப் பேசுகிறவரை சமீபத்தில் ‘யாரோ நீங்க நல்லா தமிழ் பேசுறீங்க...’ என்று சொல்லி உசுப்பேற்றி விட, இப்போது ‘நானே டப்பிங் பேசிவிடுகிறேனே...’ என்று ‘கண்டேன் காதலை’ இயக்குநர் கண்ணனிடம் கோரிக்கை வைக்க மனுஷன் ஆடிப்போய்விட்டார்.
அவருக்குத் தெரியாதா என்ன...? மேடம் பேசுகிற தமிழ்... ‘மேடம்... அது வந்து... போயின்னு...’ ஏதேதோ சொல்லி சமாளித்தவர் இப்போது பாடகி சின்மயியைப் பிடித்து டப்பிங் பேச வைத்திருக்கிறார். ‘கண்டேன் காதலை மிஸ்ஸாயிடுச்சி... அடுத்து வரப்போற ‘பையா’, ‘தில்லாலங்கடி’ படங்களில் டப்பிங் பேசாமல் விடமாட்டேன்’ என்று வரிந்துக் கட்டிக் கொண்டு நிற்கிறார் தமன்னா.
0 comments:
Post a Comment