
விஜய் நடிக்கும் 50-வது படத்துக்கு சுறா என பெயரிடப்பட்டு உள்ளது. ஜோடியாக தமன்னா நடிக்கிறார். எஸ்.பி.ராஜ்குமார் இயக்குகிறார். இவர் சமீபத்தில் ரிலீசான அழகர்மலை என்ற படத்தை இயக்கியவர். சுறா படப்பிடிப்பு கேரளாவில் உள்ள ஆலப்புழையில் நடந்து வருகிறது. இதற்காக படக்குழுவினர் கடந்த ஒரு வாரமாக அங்கு முகாமிட்டுள்ளனர். 50-வது படம் என்பதால் விஜய் உள்ளிட்ட டெக்னீஷ’யன்கள் அனைவரும் அதிக சிரமத்தை எடுக்கின்றனர். படம் பிரமாண்டமாக வரவேண்டும் என்பதில் அக்கறையாக உள்ளனர். விஜய் மீனவ இளைஞர் கேரக்டரில் நடிக்கிறார். தமன்னா தண்ரில் விழுந்து மூழ்குவது போலவும் விஜய் பாய்ந்து சென்று காப்பாற்றுவது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டன. கடற்கரை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜய், தமன்னா வந்திருப்பதை அறிந்து கேரள ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டனர். இருவரையும் முற்றுகையிட்டு ஆட்டோ கிராப் வாங்கினர். சேர்ந்து நின்று போட்டோவும் எடுத்துக்கொண்டனர். இதனால் அந்த பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. படப்பிடிப்பு நடத்தவும் சிரமம் ஏற்பட்டன. இதையடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. பின்பு பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்தது. விஜய் கேரளாவில் மிகப்பிரபலமாக உள்ளார் என்றும் அவர் நடித்த படங்களை பார்க்க தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது. அதனால்தான் படப்பிடிப்பில் அவரை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டனர் என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment